தலைநகர் டெல்லியின் சரை ரோஹில்லா பகுதியில் உள்ள நைட் கிளப் ஒன்றிற்கு ரகுவீர் நகரைச் சேர்ந்த தல்ஜித்(29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர் ஒருவர் தவறுதலாக அங்கே இருந்த பெண் ஒருவர் மீது பீர் சிந்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தலையிட்ட நைட் கிளப்பின் பவுன்சர்கள் மற்றும் மேனேஜர் ஆகியோர் தல்ஜித்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிய தல்ஜித்திற்கு திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன தல்ஜித்திற்கு மனைவி, 8 வயது மகன் மற்றும் தந்தை உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி வடமேற்குப்பகுதி காவல்துறை துணை ஆணையர் நிஹாரிகா பட் தலைமையிலான போலீசார், பாப்பார் மேனேஜர், அவரது மனைவி மற்றும் 3 பவுன்சர்கள் உட்பட 5 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…