பல்லாரி மாவட்டம் டவுன் பகுதியில் தொட்ட பசவா (19) என்ற வாலிபர் வசித்து வரும் நிலையில் அவர் ஐடிஐயில் படித்து வருகின்றார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின் போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தொடர்ந்து இவர் புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய whatsapp ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இதைப் பற்றி அந்த சிறுமியின் அண்ணனுக்கு தெரிய வந்த நிலையில் ஆத்திரமடைந்த அவர் ஐடிஐக்கு தனது நண்பர்களுடன் சென்று அங்கு மைதானத்தில் வைத்து தனது தங்கையின் புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தது குறித்து பசவாவுடன் அவர் சண்டை போட்டார். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் உட்பட 10 பேர் சேர்ந்து அந்த வாலிபரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.
கிரிக்கெட் மட்டை மற்றும் இரும்பு கம்பியால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தன்னை விட்டு விடும்படி அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணன் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். அதே சமயம் அந்த வாலிபரை 10 பேர் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…
பிரயாக்ராஜ் அருகே உள்ள கவுந்தியாரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்வா கலா கிராமத்தில் அனில் திவாரி என்பவர் தனது மனைவி…
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில்,…