தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அரசு பணிகளுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் இதுவரை 39 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயணையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளை அதனை உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத அதிமுக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்து வருகிறது. உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புளுங்குகிற வகையில் அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
சேராத இடம் தன்னில் சேர்ந்து தீராத பலி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து பொய்களை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார். இந்தி அல்லாத மொழிகளை சிதைக்கின்ற வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் இந்தி மொழியை மத்திய பாஜக அரசு திணிக்க முயற்சிக்கிறது. தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து மிகப் பெரிய துரோகத்தை செய்கிறது. இதற்கெல்லாம் நாம் செவி சாய்க்காமல் வெற்றி பாதையை நோக்கி பயணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…