கர்நாடக மாநிலம் புத்தூர் தர்பே சந்திப்பில் உள்ள ‘ட்ரீம் டெஸ்டினேஷன் ஜனசேவா கேந்திரா’ என்ற லேமினேஷன் மையத்தில் ஆவணம் ஒன்று சேதமடைந்தது தொடர்பாகப் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜல்சூரைச் சேர்ந்த பாத்திமத் மிஸ்வானா என்பவர் தனது ஆவணம் சேதமடைந்ததற்கு ரூ. 300 இழப்பீடு அல்லது சரிசெய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த சுதர்ஷன் பாய் என்பவர் மிஸ்வானா மற்றும் அவரது சகோதரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
இச்சம்பவம் குறித்து இரு தரப்பும் அளித்த புகார்கள் மற்றும் காவல் துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது என மொத்தம் 3 வழக்குகளைப் புத்தூர் நகரப் போலீசார் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சுதர்ஷன் பாய் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 2 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் திரண்ட கூட்டத்தைக் கலைக்கப் போலீசார் லேசான தடிப்படி நடத்தியதுடன், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…