பெங்களூரைச் சேர்ந்த குமார் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய மாடல் அழகி பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வந்திருந்தார். அவர் சுல்தான்பாளையாவில் இருக்கும் ஒரு வீட்டில் 2 மாடல் அழகிகளுடன் தங்கி இருந்தார். கடந்த 17-ஆம் தேதி மாடல் அழகி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த பொருட்களை கொண்டு வந்த குமார் மாடல் அழகியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். மளிகை பொருட்களை கொடுப்பது போல அந்தரங்க இடத்தை தொட்டு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரை வெளியே தள்ளி கதவை அடைத்த மாடல் அழகி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குமார் ராவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
