“ஜம்தாரா 2” என்ற வெப் சீரிஸில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் சச்சின் சாந்த்வாடே (25) தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சாப்ட்வேர் இஞ்சினியரான சச்சின், மராத்தித் திரைப்படங்கள் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர். இந்நிலையில் அவரது இந்த திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
