மும்பையின் வெர்சோவா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் விசித்திரமான “திறந்தவெளி சமையலறை” குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக வீடுகளில் நவீன வசதிகளுடன் கூடிய சமையலறைகளைத் தான் நாம் பார்த்திருப்போம், ஆனால் ரிஷப் திவாரி என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், சமையலறைக்கு கூரையே இல்லாமல் வானம் பார்த்தபடி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வீட்டின் உட்புறம் போலவே காட்சியளிக்கும் இந்த இடத்தில் கேஸ் அடுப்பு, மைக்ரோவேவ் அவன் மற்றும் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சமையல் செய்யும் இடத்திற்கு மேல் தளம் இல்லாததால், இது பார்ப்பதற்கு சாலையோரம் சமைப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறது.
A post shared by Rïshãbhh Tîwärì (@mr.rishabhh__tiwari)
“>
இந்த விசித்திரமான அமைப்பைக் கண்ட இணையவாசிகள் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர். “பில்டர் சுவரைக் கட்ட மறந்துவிட்டாரா?” என்றும், “மழை பெய்தால் சமையல் கதி என்னவாகும்?” என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் ஒருபுறம் இது புதுமையாகத் தெரிந்தாலும், மும்பையின் தூசு மற்றும் மழையைத் தாங்கி இங்கு எப்படி சமைக்க முடியும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ‘ஓப்பன் கிச்சன்’ என்ற வார்த்தைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் உண்மையாக நடந்து கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…