ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகிய இரு சகோதரர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் குருணால் பாண்டியாவின் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்டியா எவ்வித வாழ்த்துகளையும் தெரிவிக்காதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், நெருக்கமாகவும் காணப்படும் இந்த சகோதரர்களுக்குள் என்ன நடந்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், குருணாலின் மனைவி பங்கூரி சர்மா பகிர்ந்த பிறந்தநாள் பதிவில் ஹர்திக்கின் புகைப்படம் இடம்பெறாததும், ஹர்திக் தனது அண்ணனை சமூக வலைதளங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா தனது புதிய தோழியான மகிிகா சர்மாவுடன் நெருக்கமாக இருப்பது குடும்பத்திற்குள் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக, டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் சிறப்பாகச் செயல்பட்டபோதும் குருணால் மற்றும் பங்கூரி ஆகியோர் எவ்வித வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அண்ணனின் பிறந்தநாளை ஹர்திக் புறக்கணித்திருப்பது, பாண்டிய சகோதரர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவது போல் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…