பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி விட்டன. ஆனால் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் எவ்வளவு பேராபத்துகள் பிற்காலத்தில் அவர்களுக்கு காத்திருக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர்வது கிடையாது. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட்போன் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்வதாகவும் நினைக்கிறார்கள்.
இன்னும் சிலர் தங்கள் குழந்தைகள் அடம்பிடிக்காமல் இருக்கவும் சாப்பிடுவதற்காகவும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வதில் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் மூளையின் செயல் திறனை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது பல்வேறு அபாயங்களுக்கு கொண்டு செல்லும் என journal of human development and capabilities நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 163 நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தும் 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணம் அதிகரிப்பது, சமூகத்திலிருந்து விலகி இருப்பது, அதிக கோபம் உள்ளிட்ட தீவிர மனநல பிரச்சனைகளும் வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் குழந்தைகளை இந்த பேராபத்திலிருந்து பாதுகாக்க இனிமேல் செல்போன் கொடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…