இந்த உலகத்தில் ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பது இல்லை. இரட்டையர்களுக்கு கூட குணாதிசயங்களும், ரேகைகளும் வேற மாதிரி இருக்கும். மனித உடலின் வடிவமும் ஒரு நபரை பற்றி கூறுகிறது. உங்கள் விரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி கூட உங்கள் ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? சாதாரண கையில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என நாம் நினைப்போம். ஆனால் உங்கள் விரல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் உங்களைப் பற்றி நிறைய விஷயங்களை கூறலாம்.
அதனை வைத்து உங்கள் இயல்பு முதல் உங்களிடம் மறைந்திருக்கும் ரகசியங்கள் வரை அனைத்தையும் சொல்ல முடியும். முதலில் உங்கள் விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை பாருங்கள். ஆள்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே உள்ள இடைவெளி, நடு விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையே உள்ள இடைவெளி, மோதிர விரலுக்கும் சின்ன விரலுக்கு இடையே உள்ள இடைவெளி ஆகியவற்றை வைத்து குணங்களை விரிவாக கூறலாம். அதனைப் பற்றி பார்ப்போம்.
முதலில் ஆள்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால் உங்கள் ஆளுமை பண்புகள் நீங்கள் சிறந்த நிறுவனத்திறன்கள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்குவதில் ஆர்வம் உடைய நபர் என்பதை குறிக்கும். நீங்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக லட்சியத்துடன் இருக்கிறீர்கள். மேலும் தனியாக வேலை செய்ய விரும்பும் நீங்கள் அவ்வளவு எளிதாக உங்கள் கருத்துக்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டீர்கள்.
இரண்டாவதாக நடு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலை கொள்ள மாட்டீர்கள். சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழக்கூடாது என நினைப்பீர்கள். சவால் நிறைந்த செயல்களை முயற்சிக்க விரும்பும் நீங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்கும் போது எதையும் எதற்காகவும் அதனை நிறுத்த மாட்டீர்கள். எதிர்கால குறித்து நீங்கள் கவலைப்படுவது இல்லை.
கடைசியாக மோதிர விரலுக்கும், சின்ன விரலுக்கும் அதிகமாக இடைவெளி இருந்தால் உங்கள் ஆளுமை பண்புகள் நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது. கூட்டத்திலிருந்து உங்களை மட்டும் பிரித்து தனித்துவமாய் காட்டுவதை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள். யாருடைய போக்குகளையும் பின்பற்றாமல் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் செய்ய விரும்புவதை தடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் விரும்புவது இல்லை. பொதுவாக நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் மோதிர விரலுக்கும் சிறிய விரலுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும் என கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…