தேன் என்பது பல மருத்துவ குணங்கள் கொண்டது. நமது உடலுக்கு நிறைய ஆரோக்கியத்தை தருகிறது. தேனுடன் சில பொருட்களை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. உதாரணமாக ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை பனிக்கால சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. அதனால் தேனை பயன்படுத்தி அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகள் குணமாகும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் முதுமை கோடுகள் முகப்பரு கரும்புள்ளிகள் சரும வறட்சி போன்றவற்றை தடுக்கலாம்.
ஒரு டீஸ்பூன் தேனில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக மின்னும்.
நன்கு கனிந்த பப்பாளியை மசித்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால் சரும வறட்சி நீக்கப்பட்டு முதுமை கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேனில் ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு முகத்தை நீரில் கழுவி விட வேண்டும். பிறகு அந்த கலவையை கொண்டு சருமத்தில் வட்ட சுழற்சியில் ஸ்கிரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்ரைஸ் தடவ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போய்விடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமத்தில் வறட்சியால் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கி சருமத்தின் இளமை தன்மை தக்க வைக்கப்படும்.
முகப்பொலிவு பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி முகத்திற்கு புதுப்பொலிவை தரும்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…