தமிழ் திரையுலகில் நடிகர், வில்லன், நாயகன், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமையோடு கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சத்யராஜ். இவருடைய மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் இருந்தாலும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சினிமா வாசனையே இல்லாமல் வாழ்ந்தவர். தன்னுடைய தாயாரின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றார். ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் இவர் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் திடீரென்று திமுகவில் இணைந்தது பேசு பொருளானது. திமுகவின் கொள்கைகள் தனக்கு பிடித்துப் போனதால் அந்த கட்சியில் இணைந்ததாக அவர் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் நடிகராக இருந்த அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள விஜயை அவர் நேரடியாக விமர்சித்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் நேரடியாக விமர்சித்து திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திவ்யா சத்தியராஜ், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற அந்த தருணம் மிகவும் சவாலான தருணம். அந்த நேரம் கொரோனா உச்சகட்டத்தில் இருந்தது. இன்று உயிரோடு இருப்பவர்கள் நாளைக்கு உயிரோடு இருப்போமா என்பதை யாருக்குமே தெரியவில்லை. அந்த சமயத்தில் ஸ்டாலின் முதலமைச்சராகி கொரோனாவை கட்டுப்படுத்தினார்.
அந்த நேரத்தில் பாஜக தலைவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்றால் வாங்க அனைவரும் ஜாலியா பால்கனியில் நின்று கொண்டு விளக்கு பிடிக்கலாம் கைதட்டலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அதனைப் போலவே உதயநிதி ஸ்டாலின் சிலர் போல ஏசி கேரவனில் அமர்ந்து கொண்டு சொகுசு விமானத்தில் பிரண்டுடன் திருமணத்திற்காக செல்லும் போலியான அரசியல்வாதி கிடையாது எனது திவ்யா சத்யராஜ் பேசியிருந்தார். நடிகை திரிஷாவுடன் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் சென்றதை தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இப்படியான நிலையில் திவ்யா சத்யராஜ் பேச்சு குறித்து பேசி உள்ள ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, விளக்கு பிடிச்சாங்க என்று அவர் பேசியது சரியான வார்த்தை கிடையாது.
அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று நீங்களே உங்கள் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேடையில் ஒருவர் என்ன பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை. பிஜேபி காரர்கள் விளக்கை பிடிக்க சொல்லவில்லை. விளக்கை ஏற்றச் சொன்னார்கள். சத்தங்களை போட சொன்னார்கள். அது மனசுக்குள் ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அப்படி அவர்கள் செய்ய சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் கொரோனா சமயத்தில் மோடி அவர்கள் மட்டும் பிரதமராக இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
பிஜேபி அந்த நேரத்தில் என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள the vaccine war என்ற படத்தை விவேக் அக்ரிகோத்ரி அவர்கள் எடுத்திருந்தார். அந்தப் படத்தை மட்டும் பாருங்கள். நீங்கள் பேசிய அந்த வார்த்தை மிகவும் தவறான வார்த்தை அதை சரி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுடைய அப்பா சத்தியராஜ் அவர்கள் மிகப்பெரிய நடிகர் மட்டுமல்லாமல் நல்ல பேச்சாளர். அவர் மீது எனக்கு மிகப் பெரிய அபிமானம் உள்ளது. கொள்கை ரீதியாக நான் அவரை எதிர்த்தாலும் அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது. நீங்கள் இது போன்ற விஷயங்களை எல்லாம் சரி செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு தோழியாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என மதுவந்தி தெரிவித்துள்ளார்.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…