எதிர்நீச்சல் சீரியல் நடிகர் அருணின் அப்பா, அம்மா இந்த பிரபலமா?.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..!!

By Nanthini on ஜூலை 6, 2023

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

   

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சாணக்யா.

   

 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் அப்பா அம்மா குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இவரின் அம்மா கீதா சரஸ்வதி சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி சீரியலில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அருணின் அப்பா மலையாள படங்களில் சமீபத்தில் நடித்த வெப் சீரிஸ் ஒன்று வெளியாகியது.