பிரபலமான பிராண்டட் கோதுமை மாவு பாக்கெட்டை வாங்கிய ஒரே நாளில், அதற்குள் புழுக்கள் மற்றும் வண்டுகள் போன்ற பூச்சிகள் இருந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் பிராண்டட் பொருட்கள் என்றாலே சுத்தமாக இருக்கும் என்று மக்கள் நம்பும் நிலையில், இந்த சம்பவம் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஹா ஹெடியா என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் ஒரு நாளுக்கு முன்புதான் அந்த மாவு பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார். முதல் நாள் அதிலிருந்து மாவை எடுத்து சப்பாத்தியும் செய்துள்ளார். ஆனால், மறுநாள் மாவின் டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அதில் ஏதோ புள்ளிகள் இருப்பது போலத் தோன்றியுள்ளது. இதனால் சந்தேகமடைந்து அவர் சல்லடையால் மாவைச் சலித்தபோது, அதற்குள் பெரிய அளவிலான வண்டுகளும் பூச்சிகளும் நெளிவதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
https://www.instagram.com/reel/DYZI8EsPsj8/?utm_source=ig_web_button_share_sheet
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “விலை அதிகமாகக் கொடுத்து பிராண்டட் மாவு வாங்குவதை விட, கோதுமையை வாங்கி நாமே அரைப்பதுதான் பாதுகாப்பானது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்தப் பிரபல நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு நுகர்வோரின் ஆரோக்கியமும் தரமுமே முதன்மை என்றும், இந்த வீடியோ தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறி, இதுகுறித்து விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…