Categories: HISTORY

இன்று உலக கலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? ஒரு சுவாரஸ்ய தகவல்

“கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது” என்ற எம்.ஆர்.ராதாவின் மிகப் பிரபலமான வசனத்தை நாம் மறந்துவிட முடியாது. சினிமா, ஓவியம், எழுத்து, நாடகம், கூத்து போன்ற கலைவடிவங்கள் மனிதர்களின் நாகரீக வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாகும். இதில் குறிப்பாக ஓவியம் என்பது உலகளாவிய கலைகளில் தனித்துவம் பெற்றுள்ள ஒன்றாகும்.

அவ்வாறு உலகின் மிகச் சிறந்த ஓவியரின் பிறந்தநாளைதான் நாம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினமாக கொண்டாடுகிறோம். அந்த புகழ்பெற்ற ஓவியரின் பெயர்தான் லியோனர்டோ டாவின்சி.

மோனலிசா, லாஸ்ட் சப்பர் போன்ற பல புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர்தான் லியோனர்டோ டாவின்சி. இவர் பிறந்ததினமான ஏப்ரல் 15 ஆம் தேதியை நாம் உலக கலை தினமாக கொண்டாடுகிறோம்.

மேலும் நமது வாழ்வில் கலைஞர்களின் உன்னதமான பங்களிப்பையும் கலையின் முக்கியத்துவத்தையும் மதிக்கும் விதமாக நாம் கலை தினத்தை கொண்டாடுகிறோம்.

உலக கலை தினம் முதலில் 2011 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற சர்வதேச கலை சங்க மாநாட்டில் முன்மொழியப்பட்டது. அந்த மாநாட்டில் லியோனர்டா டாவின்சியின் பிறந்தநாளில் உலக கலை தினத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. சகோதரத்துவம், உலக அமைதி, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அடையாளமாக லியோனர்டா டாவின்சி இந்த நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் படி 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி உலகின் முதல் கலை தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் உலகில் வாழும் அனைத்து கலைஞர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Arun

Recent Posts

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

4 mins ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

47 mins ago

அப்பாவின் கடைசி ஆசை.. ‘காலமும் நேரமும் தான் கை கொடுக்கணும்’.. விஜயகாந்த் மகன் உருக்கம்..!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…

2 hours ago

போதைல விஜய் வீட்டு முன்னாடி த்ரிஷா பண்ண வேலை.. பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…

3 hours ago

சம்பவ இடத்திலேயே மரணம்..! பயங்கர விபத்தில் சிக்கிய விஜயின் ‘லியோ’ பட நடிகரின் குடும்பம்..!

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…

4 hours ago