நேபாளத்தில் உள்ள திரிசூலி 3ஏ நீர்தேக்கத் திட்டப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மாகர்ஜன் என்ற இரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்டனர்.
பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர மீட்பு நடவடிக்கையின் பலனாக, விபத்து நிகழ்ந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களின் மீட்புப் பணியானது தற்செயலாக கிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று நடந்தேறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதில் சஞ்சய் ஷா என்ற தொழிலாளர் மீட்கப்பட்ட பிறகு, தான் சுரங்கத்திற்குள் இருளில் தவித்த ஒன்பது நாட்களும் இறைவனின் துணையi நாடுகிற விதமாக ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்ததாகத் தெரிவித்தார்.
https://twitter.com/i/status/2095767384795824590
இதற்கிடையில், இந்த கோர விபத்தில் சிக்கி இன்னும் பலர் சுரங்கத்தின் ஆழப்பகுதிகளிலும், பவர்பவுஸ் பகுதியிலும் சிக்கியிருக்கலாம் அஞ்சப்படுகிறது. நேபாள ராணுவத்தினரின் தலைமையில் அதிநவீன உபகரணங்களைக் கொண்டு அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், இந்தச் சம்பவம் பேரிடரால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கையையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…