கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு, புதிதாக விண்ணப்பத்திருக்கிறீர்கள் என்றால், உங்களின் விண்ணப்பம் எப்படி பரிசீலிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கள ஆய்வில் தொடங்கி, வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே தகுதியானவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு விண்ணப்பத்தை போலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கும் பல்வேறு கட்டங்களாக விண்ணப்ப பரிசீலனை முடித்து பின், ஒப்புதல் அளிக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகைகான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, விண்ணப்பதாரர்களின் முகவரி, கொடுக்கப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மை, ஆண்டு வருமானம், நில இருப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா?, ஓய்வூதியதாரர்கள் போன்றவை உறுதி செய்யப்படும். பின் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் வைத்து வாகனங்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற தகவல்கள் உறுதி செய்யப்படும்.
ரேஷன் கார்டு பொருத்தவரை, சில விண்ணப்பங்கள் பரிசினை முடிந்தவுடன் அவர்களுக்கு கார்டு கொடுத்த பிறகு, அடுத்த கட்டமாக பரிசீலனை தொடங்கும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், அனைத்தும் பரிசீ நிலை நடந்து முடிந்தவுடன் ஒட்டுமொத்த பயனாளிகளுக்கும் ஒரே கட்டமாக பணம் ரிலீஸ் செய்யப்படும். பின் பயனாளிகளுக்கு ஆகும் செலவினம் கணக்கிடப்பட்டு, நிதி ஒதுக்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுடன் குறிப்பிட்ட தேதியில் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு , எப்பொழுது கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ந்து ரூ. 1000 கொடுக்கலாம் என்ற அதிகாரப்பூர்வமான முடிவை, அரசு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…