கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளின் வெற்றிக்கு எதிராகவும், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்கு எதிராகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், எஞ்சிய தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இன்று விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்றைய தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், “பொதுத்தேர்தலைப் போலவே மக்கள் மிகுந்த எழுச்சியுடனும், புன்னகையுடனும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடைபெறுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பெண்கள் கோயில்களுக்குச் சென்று தவெகவின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வாக்களிக்க வருவார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “எங்கள் தரப்பில் எந்தவிதக் குதிரை பேரமும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் பரப்பும் இத்தகைய கட்டுக் கதைகளை பொதுமக்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு என்னை பற்றி நன்றாகத் தெரியும். இங்குள்ள வாக்காளர்களுக்கு நாங்கள ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை; முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். இத்தேர்தலில் 100 சதவீதம் தவெக வெற்றி பெறுவது உறுதி,” என சவால் விடுத்தார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…