சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் என்றும் பாராமல் மகனே ஆட்களைச் சேர்த்து பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை எரித்துப் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த கனகவல்லி (37) என்பவருக்கு ஏற்கனவே பலருடன் தொடர்பு இருந்த நிலையில், ஐந்தாவதாக செந்தில் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு வந்த பின்னரும், செந்திலை திருமணம் செய்து வைக்குமாறு தனது மகனிடமே கனகவல்லி கூறியது குடும்பத்தினரிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த கணவர் தவசியப்பன் மற்றும் அவரது 18 வயது மகன் ஆகியோர் கனகவல்லியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். கடந்த 15-ம் தேதி இரவு சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் மணிகண்டன் வீட்டில் தங்கியிருந்த கனகவல்லிக்கும், அவரது மகனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகன், தனது உறவினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் கனகவல்லியின் கழுத்தை அறுத்தும், வயிற்றில் சரமாரியாகக் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பின், கொலையாளிகள் நால்வரும் சேர்ந்து கனகவல்லியின் உடலை இரவோடு இரவாக வீட்டின் அருகிலேயே குழிதோண்டி எரித்துப் புதைத்துள்ளனர். கனகவல்லியின் சகோதரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கணவர் தவசியப்பன், மகன் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வரும் போலீசார், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப மானத்தைக் காக்க மகனே தாயைக் கொன்ற இந்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…