ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. காக்கிநாடா மாவட்டம் சீதாராம காலணியை சேர்ந்த பிரசாத் மற்றும் மாதுரி தம்பதியினருக்கு புஷ்பகுமாரி (7) மற்றும் ஜெசி நோவா (5) என இரண்டு மகள்கள் இருந்தன. பிரசாத் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்று விட்ட நிலையில் வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டுக்குள் மனைவி மாதூரியும் இரண்டு மகள்களும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். அவர்களுடைய தலையில் பலத்த காயமும் இருந்துள்ளது. மூன்று பேரும் பிணமாக கடப்பதை கண்டு பிரசாத் கதறி அழுதார்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாதுரியின் மார்பகங்களிலும் தொடைப்பகுதிகளிலும் பிளேடால் அறுக்கப்பட்ட காயங்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே மாதுரியையும் அவருடைய மகள்களையும் மறும நபர்கள் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறும் நிலையில் இந்த கொடூர செயலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…