தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் 2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய காதலருடன் தாய் பைக்கில் ஏறி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்த பெண் தன்னுடைய காதலனை சந்திப்பதற்காக ஹைதராபாத்திலிருந்து நல்கொண்டாவிற்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய இரண்டு வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு தன்னுடைய காதலனோடு பைக்கில் புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய தாயை காணவில்லை என்று அந்த குழந்தை கடுமையாக அழுது கொண்டிருந்தது. இதனை கவனித்த rtc ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனை அடுத்து சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளார்கள். பிறகு அந்த பெண்ணையும் அவருடைய காதலையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் கணவர் அழைக்கப்பட்டு குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…