சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்திலுள்ள கொர்பா என்ற கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (43) என்பவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளன. மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிய வேறு கிராமத்தில் வசித்து வரும் நிலையில் சந்தோஷ் மற்றும் மனைவி இருவரும் தனியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளன. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல சந்தோஷுக்கும் லதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் வீட்டிலிருந்த கத்தியால் சந்தோஷை லதா குத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை சூட்கேசில் அடைத்து மூத்த மகளை செல்போனில் தொடர்பு கொண்டால் அதா தனது கணவர் சந்தோஷை கொலை செய்து விட்டதாக கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த மூத்த மகள் உடனடியாக தந்தை இருக்கும் கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் போலீசுக்கும் இது குறித்து தகவல் அளித்தார்.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கணவரை கொன்றுவிட்டு தலைமறைவானால் லதாவை தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…