அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ (20) என்ற கல்லூரி மாணவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்புவதற்காக ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் பயணம் செய்தபோது, “பெட்டியில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கிறது, நான் ஒருத்தி மட்டுமே பெண். பயமாக இருக்கிறது” எனத் தனது உறவினர்களுக்கு அச்சத்துடன் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் அந்த மாணவி திடீரென மாயமான நிலையில், ஸ்ரீகாகுளம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே அவரது உடல் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவியை மர்ம நபர்கள் யாரேனும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்தனரா அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் ரயில்வே போலிஸார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…