மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் 5வது தெருவில் விக்னேஷ்(27) என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பரிமளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்படியான நிலையில் விக்னேஷ் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி தன் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று முன்தினம் விக்னேஷ் மது குடிப்பதற்காக சண்டை போட்ட நிலையில் பரிமளா அணிந்திருந்த அரை பவுன் தங்கச் சங்கலியை கேட்டு தவறாக செய்துள்ளார்.
தாலியை தர மறுத்த அவரை விக்னேஷ் தாக்கி விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த பரிமளா விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த விக்னேஷ் மனைவியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து மது அருந்த சென்று விட்டார்.
இதனிடையே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து அழுத நிலையில் நீண்ட நேரம் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பரிமளா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட…
வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…
ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…