குடும்ப தலைவிகள் ஹாப்பி நியூஸ்!… இந்த மாதம் 15-ஆம் தேதி உரிமைத் தொகை வருமா?… தமிழக அரசின் முக்கிய அப்டேட்…!!!

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முந்தைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இந்த மாதம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து ₹5,000 முன்கூட்டியே வழங்கப்பட்டது. தற்போது மே மாதத்திற்கான தவணை நிலுவையில் உள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் உரையிலேயே தமிழகத்தின் நிதிநிலை மற்றும் ₹10 லட்சம் கோடி கடன் சுமை குறித்து கவலை தெரிவித்தார். இது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தது, முந்தைய அரசின் திட்டங்கள் தொடருமா என்ற விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியது.

இருப்பினும், தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் 60 வயது வரையிலான அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ₹2,500 வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதே சமயம், இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் விஜய், முந்தைய அரசுகளின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடரும் என்ற முக்கிய உறுதிமொழியை அளித்துள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நடைமுறை உள்ளது. முதலமைச்சரின் சாதகமான அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதம் 15-ஆம் தேதி ₹1,000 உரிமைத் தொகை தடையின்றி கிடைப்பதோடு, எதிர்காலத்தில் வாக்குறுதி அளித்தபடி ₹2,500 ஆக உயர்த்தப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

4 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

14 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

19 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

22 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

24 minutes ago