தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்தத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதியன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இல்லத்தரசிகள் பண்டிகைச் செலவுகளை எளிதாக சமாளிக்கும் வகையில் இத்தொகையை முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், வழக்கமான 15-ஆம் தேதி வரை காத்திருக்காமல், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே பயனாளிகளின் கணக்கில் உரிமைத்தொகையைச் செலுத்துவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மாதத்தின் தொடக்கத்தில் அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் விநியோகிக்கப்படும் அதே வேளையில், கருவூல நிதி வரவை ஆய்வு செய்து இத்தொகையையும் முதல் வாரத்திற்குள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தற்போது அரசின் தீவிர பரிசீலனையில் இருந்தாலும், பண்டிகை நாட்களைக் கருத்தில் கொண்டு நவம்பர் முதல் வாரத்திலேயே பெண்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் ராஜு மீது அவரது உறவினர் பெண்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கருமாங்கழனி பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர்…
சென்னையில் 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிதி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களை…
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் என்ஃபீல்டு பகுதியில், ஈவ் ரோஜர்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில்…