கர்நாடக மாநிலம் குண்டலூர்பேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வன சரணாலயம் உள்ளது. இந்த வன சரணாலயம் வழியாக மைசூர் மற்றும் ஊட்டியை நெடுஞ்சாலை செல்கின்றது. இந்த சாலையை அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம். அதேசமயம் சாலையோரம் நடமாடும் காட்டு யானைகள், சிறுத்தை மற்றும் காட்டெருமைகளை வாகனங்களில் வருவோர் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி இறங்கி செல்போனில் படம் எடுத்து செல்கிறார்கள். இப்படியான நிலையில் நேற்று மாலை மைசூர் மற்றும் ஊட்டி நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சுற்றியது.
பிறகு அந்த யானை சாலையில் குறுக்கே நின்று வாகனங்களை வழிமுறைத்தது. இதனால் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு வாகனத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். அந்த சமயத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் அந்த வழியாக வந்த நிலையில் அவர் திடீரென்று காரில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையை செல்போனில் படம் பிடித்தார். மேலும் அவர் செல்பி படம் எடுக்க யானையின் அருகில் சென்ற நிலையில் அந்த சமயத்தில் ஒரு கார் யானையை கடந்து செல்ல முயன்றது. அப்போது திடீரென்று ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை காரை தன்னுடைய தும்பிக்கையால் தாக்கியதுடன் மிரண்டு ஓடி செல்போனில் படம் பிடித்தவரையும் துரத்தியது.
ஒரு கட்டத்தில் அவர் கால் தவறி சாலையில் விழுந்த நிலையில் அந்த நபரை யானை தன்னுடைய காலால் மிதித்தது. இதில் அவருடைய தலை சாலையில் மோதியது. பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தன. ஐயோ அம்மா என அச்சத்தில் அலறி துடித்த நிலையில் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…