பழிவாங்கப் போடப்பட்ட மாஸ்டர் பிளான்?… 12 ஆண்டு கால திருமண பந்தத்தில் அரங்கேறிய அதிர்ச்சித் திருப்பம்… போலீசாரையே குழப்பத்தில் ஆழ்த்திய மதுரியின் பகீர் புகார்..!!!

Spread the love

திருமணம், துரோகம் மற்றும் சதித்திட்டம் எனத் திரையுலகப் பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ஏட்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரி மற்றும் நீரஜ் ஆகியோருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், திருமணமான மூன்றே ஆண்டுகளில் மதுரி அதே கிராமத்தைச் சேர்ந்த தேவ் சிங் என்பவருடன் ஓடிச் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் துரோகத்தைத் தொடர்ந்து, தனது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக மதுரி மீது நீரஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பல ஆண்டுகளாக இந்த சட்டப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தற்போது நீரஜை முடக்கும் நோக்கில் ஒரு புதிய சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.


“>

மேலும் சமீபத்தில் மதுரியின் காலில் துப்பாக்கிச் சூடு பட்ட நிலையில், அவர் தனது முதல் கணவர் நீரஜ் தான் தன்னைச் சுட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இது நீரஜ் தொடர்ந்துள்ள கொள்ளை வழக்கை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற வைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் நீரஜைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, அவருக்கு சட்ட ரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க மதுரி மற்றும் அவரது இரண்டாவது கணவர் தரப்பு இந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தப் புகார் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது உண்மையானத் தாக்குதலா என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.

Rajeshwari

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago