மனைவி மீது சந்தேகம் கொண்ட லாரி டிரைவரை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இடையன்குளத்தூர் கிராமம் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் விஜய்(27) இவர் அதே ஊரை சேர்ந்த ஷர்மிளா என்பவரை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது .விஜய் லாரி டிரைவர் என்பதால் வேலைக்கு சென்றால் 10 – 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். அப்போது அக்கம் பக்கத்தினர் பலவிதமாக பேசுவதால் விஜய் மனைவி ஷர்மிளாவை சந்தேகத்தில் அடித்து உதைப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் மனைவி ஷர்மிளாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஷர்மிளாவின் அம்மா ராணி பாத்திமா உடன் இருந்துள்ளார். இதில் விஜயை மனைவி ஷர்மிளா மாமியார் ராணி பாத்திமா ஆகியோர் கம்பியால், கட்டையாலும் தாக்கியுள்ளனர் . இதில் விஜயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் விஜயின் கழுத்தில் கயிறு கட்டி அருகில் உள்ள ஜன்னலில் தொங்க விட்டுள்ளார்கள். பின்னர் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்கள். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். பிறகு இது குறித்து நடந்த விசாரணையில் மனைவி ஷர்மிளா, மாமியார் ராணி பாத்திமா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…