ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடைய மகள் கீர்த்தி மீனா. இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் தற்போது இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே சிவக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த கீர்த்தி மீனா கணவரிடம் இது தொடர்பாக கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியாக தனது கள்ளக்காதலனுடன் இருந்த வீடியோவை நேரடியாக மனைவியிடம் சிவக்குமார் காட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தி மீனா, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான சில வருடங்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…
மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும்…
போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்…