அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள நார்த்லேக் பகுதியில், 37 வயதான ஹோலி லீயன் புளோரஸ் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரு பிஞ்சு குழந்தைகளைக் கத்தியால் கொடூரமாகக் குத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 4:20 மணியளவில், தலையில் கத்திக்குத்து காயமடைந்த கணவர் அவசர உதவி எண் 911-க்குத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் 3 வயது பெண் குழந்தை மற்றும் 10 மாத ஆண் குழந்தை ஆகிய இருவரும் மார்பில் கத்திக் குத்து காயங்களுடன் கிடப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிருக்குப் ஆபத்தான நிலையைக் கடந்து குணமடைந்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஹோலி லீயன் புளோரஸ் மீது ‘திட்டமிடப்பட்ட கொலை முயற்சி’ மற்றும் கொடூர ஆயுதப் பயன்பாடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இதற்கு முன்பு பலமுறை இவர்களது வீட்டிற்கு நலவாழ்வு விசாரணைகளுக்காக காவல்துறை வந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…