தலைநகர் டெல்லியில் மதங்கீர் என்ற பகுதியில் வசித்து வரும் தினேஷ் (28) என்பவருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தினேஷ் மீது அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தினேஷுக்கும் அவருடைய மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஐயோ அம்மா என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம் பக்கத்தினரை அலற வைத்தது. பலரும் எழுந்து ஓடி வந்த நிலையில் வலியில் கதறி துடிப்பது தினேஷ் என அனைவருக்கும் தெரிந்தது.
வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க பலரும் கதவை தட்டினர். சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்ட நிலையில் தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சில நாள் சிகிச்சைக்கு பிறகு பேசும் விலக்கி வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைய வைத்தது. அதில் நானும் என்னுடைய மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம், திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். அருகில் என்னுடைய மனைவி நின்று கொண்டிருந்தார்.
*//அவர் என் உடலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டார். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளி வீசினார். நான் வழிப் பொறுக்க முடியாமல் கதறினேன். வேண்டாம் வேண்டாம் என கதறிய போது என் மனைவி நீங்கள் கத்தினால் நான் இன்னும் என்னை ஊற்றுவேன் என்று கூறி மிரட்டினார் என்று தினேஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தினேஷ் மனைவியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…