காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் தினகரன் (45). பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தினகரன் தனது மனைவி அமலா, மாமியார் விஜயா மற்றும் இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தினகரனுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால், அவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தினகரன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், தனது மனைவி அமலாவிடம் தேவையின்றி வம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார் விஜயா, மகளிடம் சண்டை போட வேண்டாம் என்று தினகரனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன், மனைவி அமலாவை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். அதனைத் தடுத்துக் காப்பாற்ற வந்த மாமியார் விஜயாவையும் அவர் கொடூரமாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
தினகரனின் இந்த அராஜகப் போக்காலும், தொடர்ந்து தங்களைத் தாக்கியதாலும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மனைவி அமலாவும், மாமியார் விஜயாவும் அவரைத் திருப்பித் தாக்கினர். ஒருகட்டத்தில் தினகரனை கீழே தள்ளி, வீட்டில் இருந்த கனமான அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் மிதந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் இரவு 11 மணியளவில் நடந்துள்ள நிலையில், மாமியாரும் மனைவியும் விடிய விடிய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடலுடனேயே இருந்துள்ளனர்.
மறுநாள் காலை 7 மணியளவில் மாமியார் விஜயா தாமாகவே முன்வந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) தொடர்புகொண்டு நடந்த விபரங்களைக் கூறினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் காவல்துறையினர், தினகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “தினகரனை நாங்கள்தான் கொலை செய்தோம்” என்று அமலாவும் விஜயாவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட இந்த குடும்பக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிமில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில், ஒரு தெரு நாய் மாணவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்த…
சொத்து குவிப்பு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது…
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு, கண்ணாடியின் முன் நின்று தனது தசைகளை இறுக்கிப் பெருமிதம் காட்டிய சில நொடிகளிலேயே ஒரு வாலிபர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும்…
கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…