பெங்களூருவில் வசித்து வந்த காவ்யா (27) என்பவருக்கும் அவரது கணவர் ரங்கசாமிக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை அன்று உணவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரையே காவ்யா மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, அவரிடம் கடுமையாகத் தகராறு செய்துள்ளார். இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிப்போய், ரங்கசாமி தனது மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டியதுடன் அவரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
கணவரின் இத்தகைய செயலால் மிகுந்த மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த காவ்யா, வீட்டில் இருந்த விவசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே காவ்யாவின் உயிர் பிரிந்துவிட்டது.
இவர்களுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது மற்றும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அற்பக் காரணத்திற்காக ஒரு இளம் தாய் தனது உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…