“மதுபோதையில் வெறிச்செயல்: மனைவியை தூணில் சங்கிலியால் கட்டிப்போட்டு தாக்குதல்…! நெஞ்சை பதறவைக்கும் மத்தியப் பிரதேச கொடூரம்…!”

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள சிபிபுரா கிராமத்தில், கணவனால் ஒரு பெண் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 10 அன்று, மங்கிபாய் தன்வர் (30) என்ற பெண்மணி சமைத்து வைத்திருந்தபோது, அவரது கணவர் சர்தார் சிங் தன்வர் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். எந்த காரணமும் இன்றி மனைவியிடம் தகராறு செய்த அவர், தடியாலும் கைகளாலும் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைப் பொறுக்க முடியாமல், காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்தப் பெண் நள்ளிரவில் காடுகள் மற்றும் வயல்வெளிகள் வழியாக 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.

ஆனால், காவல் நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே வழியில் அந்தப் பெண்ணை கணவன் கண்டுபிடித்து, மீண்டும் தாக்கி வலுக்கட்டாயமாக வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்ததும், “இனி எப்படி காவல் நிலையத்திற்குச் சென்று என் மீது புகார் அளிக்கிறாய் என்று பார்க்கிறேன்” எனக் கூறி, மனைவியின் கழுத்தில் இரும்புச் சங்கிலியைப் போட்டு வீட்டின் தூணோடு பூட்டியுள்ளார். அத்துடன் நிற்காமல், கேஸ் அடுப்பில் இரும்பு கம்பியை பழுக்கக் காய்ச்சி, பெண்ணின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொடூரமாகச் சுட்டுத் தீய்த்துள்ளார். சுமார் 24 மணி நேரம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, வெளியில் சொல்ல முடியாத சித்திரவதைகளை அந்தப் பெண் அனுபவித்துள்ளார்.

பின்னர், கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டி மனைவியை மிரட்டி எழுதிக் வாங்க கணவன் வெளியே சென்ற சமயத்தில், மங்கிபாய் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து சங்கிலியின் பூட்டை உடைத்து தப்பியோடியுள்ளார். கழுத்தில் சங்கிலி மற்றும் பூட்டுடன் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து அவர் கில்சிப்பூர் காவல் நிலையத்தை அடைந்தபோது, மக்கள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையினர் உடனடியாக அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை அகற்றி, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரது உடலில் காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த கணவர் சர்தார் சிங்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Swetha

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago