இப்போ வரைக்கும் அந்த வலி இருக்கு… ‘Koffee With DD’ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது ஏன்..? மனம் திறந்த தொகுப்பாளினி DD..

By Begam on பங்குனி 6, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்படும் பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர்.

   

அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ஆனால் சில வருடங்களாகவே இவர் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது கிடையாது. இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தொகுப்பாளினி டிடி தனது  திரைப்பயணம், உடல்நிலை குறித்து பேசியிருந்தார். அப்பொழுது அவர்  ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த          ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதன் காரணம் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

   

 

அதாவது,  ‘நம்முடைய உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நம்மால் அடுத்தடுத்து வேலைகளை பார்க்க முடியும். நாம் ஆரோக்கியமாகவும் நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்டேன்.

அதிக நேரம் நின்றுகொண்டே நான் ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி இருந்தது. அதற்கு முதலில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் எனக்கு வலி வந்து விட மீண்டும் அந்த இடத்தில் ஆபரேஷன் செய்தேன். இப்போது வரைக்கும் நான் அந்த வலியோடு தான் நிற்கிறேன். இதனால் தான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை’ என்று மனவேதனையுடன் கூறினார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.