Categories: சினிமா

சரிதா சினிமாவில் இருந்து விலகியது ஏன்…? அவர் வாழ்க்கையில் இத்தனை ஏமாற்றமா…?

Spread the love

1980 களில் தெனிந்தியாவில் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சரிதா. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சரிதா. இந்த அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரிதா. நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர் சரிதா. 1990 களில் நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ்மிதா சென், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா போன்ற நடிகைகளுக்கு தமிழ், கன்னடம் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் டப்பிங் செய்தவர் சரிதா என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் கே பாலச்சந்தர் இயக்கிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலக பயணத்தை ஆரம்பித்த சரிதா அதன் மூலம் பிரபலமாகி தமிழில் பெரும்பாலும் பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் சரிதா.

வண்டிச்சக்கரம், புதுக்கவிதை, கல்யாண அகதிகள், அச்சமில்லை அச்சமில்லை ஆகிய திரைப்படங்கள் சரிதா நடித்ததில் ஹிட் ஆனவை ஆகும். வண்டிச்சக்கரம் மற்றும் அச்சமில்லை அச்சமில்லை ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றார் சரிதா. இது மட்டுமில்லாமல் பல வெற்றி திரைப்படங்களுக்கு டப்பிங் செய்ததால் சிறந்த பெண் டப்பிங் கலைஞர்களுக்கான நந்தி விருதை நான்கு முறை வென்றவர் சரிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1980, 90களில் பிரபலமாக இருந்த நடிகை சரிதா 2000களின் ஆரம்ப கட்டத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி இருந்தார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் சரிதா. நடுவில் ஏன் அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், சினிமாவில் வருவதற்கு முன்னால் 16 வயதிலேயே 1975 ஆம் ஆண்டு வெங்கடா சுப்பையா என்ற நபரை மணந்த சரிதா கருத்து வேறுபாட்டினால் ஒரு வருடம் கழித்து பிரிந்ததற்கு பின்பு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் அவர்களை மணந்தார் சரிதா. இவர்களுக்கு சர்வண் மற்றும் தேஜா சென்ற இரு மகன்கள் உள்ளனர். திருமணமான சிறிது தினத்திலேயே முகேஷ் சரிதாவை மிகவும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். தினமும் குடிப்பது பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வேலைகளை செய்து வந்திருக்கிறார் முகேஷ். இதை தட்டி கேட்ட சரிதாவை கர்ப்பிணி என்றும் பாராமல் வயிற்றில் எத்தி உதைத்திருக்கிறார் முகேஷ். எனினும் தனது மாமனார் மீது அதிக அன்பு வைத்திருந்தாலும் அவர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டும் 23 வருடங்களாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த சரிதா 2011 ஆம் ஆண்டு நடிகர் முகேஷை விவாகரத்து செய்துவிட்டு தனது மகன்களுடன் துபாயில் செட்டில் ஆகி விட்டார் சரிதா. தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார் சரிதா என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

5 மணத்தியாலங்கள் ago