தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலரான நயீம் மூசா, அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவது குறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். மாநில காவல்துறை மற்றும் மத்திய அரசின் ‘இசட் பிளஸ்’ உயர்தர பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் இருக்கும்போது, அரசு அமைப்புகளைச் சாராத ஒரு நபர் முதல்வரின் நிழல் போல கூடவே செல்வது விதிகளுக்கு உட்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் அவர் எந்த விதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார் என்றும், மாநில காவல்துறையின் மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா என்றும், பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழக அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணியாற்றி வரும் நயீம் மூசா, புதுவையின் மாஹே பிராந்தியத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். துபாயில் குடியேறி, அங்கு பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் பணியாற்றிய அவர், 2008 ஆம் ஆண்டில் ‘ஜென்ட்டூர் செக்யூரிட்டி சர்வீசஸ்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். துபாய்க்கு வரும் உலகளாவிய பிரபலங்கள், கோலிவுட் மற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் இவரது நிறுவனம் புகழ்பெற்றது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே நயீம் மூசாவின் மேற்பார்வையில் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பவுன்சர்களே பாதுகாப்புப் பணிகளை கவனித்து வந்தனர். குறிப்பாக, விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளில் இவரது நிறுவனமே பாதுகாப்பை ஒருங்கிணைத்தது.
நயீம் மூசாவின் பாதுகாப்புச் சேவையின் மீது ஏற்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே, விஜய் அவரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துக் கொண்டார். விஜய் கட்சிப் பணிகளில் ஈடுபட்டது முதல் தற்போது முதல்வராகப் பொறுப்பேற்று டெல்லி பயணம் மேற்கொண்டது வரை நயீம் மூசா அவரது நிழல் போலவே தொடர்ந்து கூடவே பயணித்து வருகிறார். இந்தச் சூழலில்தான், ஒரு மாநில முதல்வருக்குரிய உச்சக்கட்ட அரசு பாதுகாப்பு வளையத்திற்குள் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நபர் எப்படி அனுமதிக்கப்படலாம் என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…