ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தனி ஒருவன் 2 படம் எடுக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, நாசர், ராதாரவி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான தனி ஒருவன் படத்தை மோகன்ராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை படக் குழுவினர் ரசிகர்களுடன் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி ஒரு பேட்டி அளித்திருந்தார். தொகுப்பாளர் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என கேள்வி எழுப்பியதற்கு, ஜெயம் ரவி பார்ட் 2-வில் ஒருத்தர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். கூடிய சீக்கிரம் அது தெரியவரும் என கூறினார்.
இந்நிலையில் அரவிந்த்சாமி அளவிற்கு இரண்டாம் பாகத்தில் வில்லனாக மிரட்டப் போகும் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் மாமன்னன் படத்தில் சிறப்பாக நடித்திருந்த பகத் பாஸில் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதே போல அனைத்து விதமான கேரக்டர்களுக்கும் நன்றாக பொருந்தக்கூடிய விஜய் சேதுபதி நடித்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். எது . எப்படியோ படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…