“அடேய் என்னை விடுங்கடா… எவன்டா என்ன 108 ஆம்புலன்ஸ்ல ஏத்துனது”… மருத்துவமனையில் குடிமகன் செய்த அலப்பறை… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!

Spread the love

பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவர், “என்னை ஏன் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி வந்தீர்கள்?” என்று மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகைச்சுவை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளிவாசல் அருகே நபர் ஒருவர் சாலையில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். அதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவர் ஏதோ விபத்தில் சிக்கி அடிபட்டு உயிருக்குப் போராடுகிறார் என்று நினைத்து, மனிதாபிமான அடிப்படையில் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் வரும் வரை பயங்கர ‘கிக்’-கில் இருந்த அந்த நபர், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும் திடீரென எழுந்து ரகளையில் ஈடுபடத் தொடங்கினார்.

மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் தான் இருப்பது ஆஸ்பத்திரி என்பதை உணர்ந்த அந்த குடிமகன், போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த ஊழியர்களிடம் அதிரடியாகப் பேசத் தொடங்கினார். “நான் பாட்டுக்கு சாலையோரமாக செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன், என்னை எவன்டா 108 ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டது? இப்ப பாரு, என்னோட 250 ரூபாய் மதிப்புள்ள செருப்பைக் காணோம். என் சட்டைப் பையில் இருந்த 3,500 ரூபாய் பணத்தையும் காணோம். என்ன கவர்மெண்டுடா இது? முதல்ல என் செருப்பை எடுத்துக் கொடுங்க, அப்பதான் நான் இங்கிருந்து நகருவேன்!” என்று சத்தம் போட்டு அட்ராசிட்டி செய்தார்.

விபத்தில் சிக்கியவரைப் பேராபத்தில் இருந்து காப்பாற்ற நினைத்து பொதுமக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டால், அவரோ தனது செருப்பு தொலைந்ததற்கும், போதை கலைந்ததற்கும் மருத்துவமனை ஊழியர்களையே அலறவிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் முடிந்த இந்த எதார்த்தமான, நகைச்சுவையான அலப்பறை வீடியோவை நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

12 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

15 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

20 minutes ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

27 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

33 minutes ago