நானும் ரவுடி தான்…”பாக்கலாமா “… 6 மாசத்துல ஆட்சி முடியுது… “தைரியம் இருந்த தொட்டுப் பார் தம்பி”… தவெக அரசை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்… தமிழக அரசியலில் வெடித்த சர்ச்சை!…

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அரசை விமர்சித்து வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அண்மைக்கால பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய மின்துறை அமைச்சர் தன்னை ‘ரவுடி’ என்று விமர்சித்ததற்கு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். தான் 16 வயது முதல் தொழில் செய்து வருவதாகவும், யாரையும் தேவையின்றி கடினமாகப் பேசியதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், “ஆம், நான் ரவுடிக்கு ரவுடிதான், எங்களை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது; நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உங்கள் பருப்பு எங்களிடம் வேகாதது தம்பி” என தவெக அமைச்சருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போதைய தவெக அரசின் மணல் குவாரி ஏல நடைமுறைகள் மற்றும் மின்துறை அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை அனிதா ராதாகிருஷ்ணன் முன்வைத்தார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியதும் இந்த முறைகேடுகளுக்கு தகுந்த பதில் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். “இவர்களுக்கு இந்த ஆட்சி நிரந்தரமானது அல்ல; இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவது நிச்சயம்” என்று அவர் பேசியுள்ளது தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசி கைதான இவர், தற்போது மீண்டும் “ரவுடிக்கு ரவுடி” என சர்ச்சையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago