ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் தனது மனைவியைக் கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, உடலை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துத் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்பவருக்கும், அவரது மனைவி வெங்கட லட்சுமம்மாவிற்கும் இடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த வெங்கண்ணா மனைவியை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மேலும் பின்னர் எவருக்கும் சந்தேகம் வராதபடி வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். வெங்கண்ணாவின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பார்த்தபோது வெங்கட லட்சுமம்மா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள வெங்கண்ணாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…