மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசியலில் ‘செயற்கை விரல்’ புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மொத்தம் 142 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கும் சூழலில், அனைவரின் பார்வையும் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் மீதே உள்ளது. இங்கு மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முறைகேடாக வாக்களிக்கச் செயற்கை விரல்களைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, பவானிபூர் தொகுதியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் சுமார் 700-க்கும் மேற்பட்ட செயற்கை விரல்களைத் தயார் செய்துள்ளதாகப் பகீர் புகாரை முன்வைத்தார். இந்த விரல்களைப் பயன்படுத்தித் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், சுமார் 3,810 பூத் ஸ்லிப்புகள் விநியோகிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சுவேந்து அதிகாரியின் இந்தப் புகாரைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அடியோடு மறுத்துள்ளது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற, கற்பனையான புகார் என்றும், தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற அபத்தமான கதைகளைக் கட்டி விடுவதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அரூப் சக்ரவர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். ஜனநாயக நாட்டில் இத்தகைய முறைகேடுகள் சாத்தியமே இல்லை என்றும், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இத்தகைய விசித்திரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் திரிணாமுல் தரப்பு வாதிடுகிறது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 142 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில், இந்த இடங்களில் 123 தொகுதிகளை மம்தா பானர்ஜியின் கட்சி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டத் தேர்தல் மம்தா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு அக்னிப் பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது. பவானிபூரில் மக்களின் உண்மையான விரல்கள் யாருக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்பது வரும் மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…