உத்தரப் பிரதேச மாநிலம் அஸாம்கரைச் சேர்ந்த அனு யாதவ் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டுப் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் தகாத சூழலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதமும் காரசாரமான விவாதங்களும் ஏற்பட்டாலும், சமூகத்தில் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதித்தனர். இறுதியாகக் காவல் நிலைய வளாகத்திலேயே இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, இவர்களது காதல் கதை சுபமாக முடிவுக்கு வந்தது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…