தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகவும், கூட்டணிக் கட்சிகள் உட்பட மொத்தம் 176 வேட்பாளர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளைப் போல, அரசியலில் முறியடிக்க முடியாத பல சாதனைகளை திமுக செய்துள்ளது என்றும், இனிவரும் காலங்களிலும் அந்த சாதனைகளைத் தொடருவோம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மக்களுக்கான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுகதான் உண்மையான “OG” (Original Gangster) என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழகத்தின் திட்டங்களைப் பார்த்துதான் மத்திய அரசே காப்பி அடித்து வருவதாகச் சாடினார். குறிப்பாக, மகளிர் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்பட உள்ள ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் குறித்துப் பேசிய அவர், பெண்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளைத் தங்களின் விருப்பப்படியே வாங்கிக் கொள்ளலாம் என்றும், இதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் கலகலப்பாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர், தான் கொரோனாவிலேயே மறைந்திருக்க வேண்டும் என வன்மத்துடன் பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டார். “பழனிசாமி அவர்களே, இந்த ஸ்டாலின் இன்னும் மக்களுக்காகப் ஏராளமான திட்டங்களைச் செய்யப் போகிறான்; அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ஆவேசமாக முழங்கினார். அனல் பறக்கும் இந்தத் தேர்தல் பிரச்சாரம் புதுக்கோட்டை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…