திமுக முகத்திரையை கிழிச்சி தொங்கவிடப் போறோம்… ஸ்டாலின் கிட்ட எதுக்காவது பதில் இருக்கா?…. குஷ்பு காட்டம்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணை தலைவர் குஷ்பூ, மத்திய அரசின் பெண்களுக்கான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான திட்டங்கள் என்று பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்கள் தலையாயக் கடமை. ஆனால் அது மக்களிடம் சேரும்போது திமுகவோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு சேர்க்கின்றனர். பொதுமக்களிடம் சென்று சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை திமுகவினர் நடுவில் எடுத்துக் கொள்வதால் சாதாரண மக்களிடம் அது சென்று சேர்வதில்லை. எனவே நாங்கள் மக்களை சந்தித்து பேச போகிறோம். இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அத்தனை பேர் உயிரிழந்தாங்க.

அந்த வழக்கு என்ன ஆச்சு என்று இதுவரை தெரியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்ன ஆச்சு? எந்த பக்கம் பார்த்தாலும் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை என காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இடம் எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுகின்றது. இந்த முறை திமுகவின் அந்த முகத்திரையை கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்கு பயனளிக்காமல் தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்துள்ள திமுகவை பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்போம். அதுதான் எங்கள் பணி என்று குஷ்பூ காட்டமாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago