Categories: CINEMA

சொன்னது சொன்னபடியே நடக்கும்… ‘தளபதி 68’ குறித்து நாளை வெளியாகவுள்ள சூப்பரான அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது 4 நாட்களில் 400 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது.

லியோ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘தளபதி 68’ அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் நாளை மதியம் 12.05 மணிக்கு படத்தின் முக்கிய பூஜை வீடியோவுடன் ,படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை தற்பொழுது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த அறிவிப்பு…

Begam

Recent Posts

I Wish.. You Wish..? சிறுவயதில் பிரதமர் இந்திரா காந்திக்கு Letter எழுதிய விவேக்.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்..!!

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் கடந்த 1987 ஆம் ஆண்டு ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற…

3 மணி நேரங்கள் ago

புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? தர்ஷா குப்தாவின் தாறுமாறான போட்டோ ஷூட்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

சாலையில் வாட்டர் பாட்டில் விற்ற சிறுவனுக்கு.. மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா.. வைரலாகும் வீடியோ..!

சாலையில் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

3 மணி நேரங்கள் ago

பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசை வைத்த குழந்தைப்பா.. வைரமுத்து எழுதிய வரிகளுக்கு ஏற்ப நடந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர்…

3 மணி நேரங்கள் ago

கலாபக்காதலன் பட நடிகைக்கு கல்யாணமாகி இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேணுகா மேனன் தனது குடும்பத்துடன்…

4 மணி நேரங்கள் ago

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம்.. பாக்கியாவுக்கு மட்டும் இவ்ளோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்…

4 மணி நேரங்கள் ago