“அடியே இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு” ஓடிப்போன மனைவியை பிடிக்க… வாக்குச்சாவடியில் 5 மணி நேரம் காத்திருந்த கணவர்… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!

Spread the love

மேற்கு வங்க மாநிலம் தாராபாரி கிராமத்தில், பிரிந்து சென்ற மனைவியைப் பிடிப்பதற்காக கணவர் ஒருவர் வாக்குச்சாவடியில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி, வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டதை அறிந்த அந்த நபர், தனது பெயரை மனைவியின் வாக்காளர் அட்டையிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது பெயர் நீக்கப்படும் வரை மனைவியை வாக்களிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறி வாக்குச்சாவடி மையத்திலேயே அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த திடீர் போராட்டத்தால் வாக்குச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தலையிட்டு அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அப்பெண் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குப்பதிவு முடிந்தவுடன், இருவரையும் அங்கிருந்து அதிகாரிகள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடியில் நடந்த இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

8 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

8 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

9 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago