தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினால் விமர்சனங்கள் இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், நாம் திமுகவிலிருந்து விலகினால் மற்றவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்க மாட்டோம். அவர்களின் வேலை முடிந்து விடும். அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும். நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், நாம் அதிமுக பக்கம் போகவில்லையே, பாஜகவோடு உறவாடவில்லையே என்பதுதான். இதுதான் அவர்களின் பிரச்சனை என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…