விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார்.

அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளன.

இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் டிவி பாலா உள்ளிட்டோருடன் மணிமேகலை அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அப்போது ஏர்போட்டில் எடுத்த புகைப்படத்தை மணிமேகலை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மணிமேகலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள சமயத்தில் அவரின் கணவர் இங்கு வேறொரு தொகுப்பாளர்டன் சேர்ந்து டான்ஸ் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த மணிமேகலை நல்லா இருக்கு நீங்க பண்றது என அவருக்கு பதில் அளித்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
